பெட்ரோலுக்கு வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய பேருந்து.

மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.

இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊறணி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால் இன்று காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.

எரிபொருள் வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய தனியார் பேருந்து: சாரதி தப்பியோட்டம்(படங்கள்)

இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதி தப்பியோட்டம் விபத்தையடுத்து பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad