யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்க எரிபொருள் இல்லை. என கூறப்பட்டிருந்த நிலையில் இரவு வேளையில் கறுப்பு சந்தை வியாபாரிகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டதை பொதுமக்கள் கண்டு பிடித்ததால் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் இல்லை. என கூறப்பட்டுவந்த நிலையில் நேற்றய தினம் இரவு 10 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் விளக்குகளை அணைத்துவிட்டு, பொிய கான்களில் எரிபொருள் நிரப்பபட்டுள்ளது.
இதனை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டு நியாயம் கேட்டுள்ளனர். இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த சண்டியர்கள் பொதுமகன் மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் பதற்ற நிலைமையேற்பட்டிருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் பதற்றத்தை தடுக்க முயற்சித்ததுடன், கறுப்பு சந்தை வியாபாரிகளுக்காக எரிபொருள் நிரப்பபட்ட கான்களை எடுத்து சென்றனர்.
இதன் பின்னரும் சில மணிநேரம் குழப்பநிலை நீடித்தது.