அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் எரிவாயுவா? விநியோகத்தில் குழப்பம்

யாழ். மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் இன்று யாழ். பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள அரச திறன் விருத்தி மையத்தில் ஒன்று கூடினர்.

இதன் போது குறித்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் சிலர் தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் வேண்டுமென கேட்ட நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

இதன்போது அங்கு நின்ற அதிகாரிகள் “அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் எரிவாயு வழங்கப்படுவதாக” தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பொதுமக்கள் தமது பிரதேசங்களில் எரிவாயுக்காக பெயர்களை பதிவு செய்த நிலையில் இவ்வாறு பெருமளவு சிலிண்டர்களை அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரே தடவை வழங்குவது எவ் விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபனை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு விநியோகத்தை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தனர்.


Top Post Ad

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.