யாழ் கந்தர்மடம் பகுதியருகே இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் கந்தர்மடம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த இளைஞரொருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகுமார் சரவணபவன் என்கிற 32 வயதுடைய பட்டதாரி இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

(08) இரவு 9.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றவரே கந்தர்மடம் பகுதி அருகே உள்ள மரத்துடன் மோதுண்டு மயக்கமுற்றார்.

உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்தார்.

உயிரிழப்புக்கு அதிவேகமாக மோட்டார் வாகனத்தை செலுத்தியமையே காரணம் என தெரியவருகிறது.

உயிரிழப்பு தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமவசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.