யாழில் போதை பொருள் கடத்தியவர்களை கைது செய்ததற்காக பொலிஸார் 4 பேருக்கு இடமாற்றமா?

யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு திடீர் இடமாற்றம் வழங்க்பட்டிருக்கின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலாகும் வகையல் குறித்த 4 பேருக்கான இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

வட மாகாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தால் குறித்த இடமாற்ற கடிதங்கள் கடந்த வியாழக்கிமை மாலை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அண்மைய நாள்களில் ஆறு தடவைகள் குடு போதைப் பொருள் வியாபாரிகளை தொடர்ச்சியாக கைது செய்துள்ளனர் என பொதுமக்கள் கூறினர். 

இடமாற்றத்திற்கு ஒரு நாள் முன்னரும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு  போதைப் பொருளை கடத்தி வந்து விநியோகம் செய்யும் இருவரை கைது செய்திருந்தனர். 

இந்நிலையிலேயே குறித்த கைது நடவடிக்கைகளை முன்னெடுத்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், வாக்குமூலங்களை பதிவு செய்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், 

மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வருக்கே இவ்வாறு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.