யாழில் திருட சென்ற வீட்டில் சமைத்து சாப்பிட்டு போதையில் தூங்கிய திருடர்கள்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூளாய் வேரம் பகுதியில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதாவது வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொள்ளையிட சென்ற கொள்ளையர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு மது அருந்திவிட்டு போதையில் தூங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது

இந்நிலையில் இன்று காலை வீட்டின் உரிமையாளர் வீட்டுக்கு வந்து திருடர்களை கண்டதும் அயலவர்களை அழைத்துள்ளனர்.

இதன்போது அயலவர்கள் வருவதையறிந்து ஒருவர் தப்பிச் சென்ற நிலையில், மற்றையவர் கிராமவாசிகளின் கைகளில் அகப்பட்டுள்ளார்.

மக்களால் பிடிக்கப்பட்ட கொள்ளையர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மூளாய் வேரம் பகுதியை சேர்ந்த கொள்ளையர் தப்பிச் சென்றுள்ள நிலையில், சுன்னாகத்தினை சேர்ந்தவர் மக்களால் பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தப்பித்துச் சென்றவருக்கு வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும் திறந்த பிடியாணையொன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 




Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad