27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கல்யாண ராமன் கைது.

 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து மாநிலங்களில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உட்பட 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்த ஒடிசா நபர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஸ் ஸ்வைன்(66). இவருக்கு பிபு பிரகாஷ் ஸ்வைன் என்ற பெயரும் உண்டு. இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு 128 போலி கிரெடிட் கார்டுகள் மூலம், கேரளாவில் உள்ள 13 வங்கிகளில் ரூ.1 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்துள்ளார்.

இவர் தன்னை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் துணை இயக்குனராக பணியாற்றுவதாக கூறியுள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் சிலரிடம் அவர்களின் பிள்ளைகளுக்கு எம்.பி.பி.எஸ் இடம் வாங்கித் தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்துள்ளார்.

திருமண வெப்சைட்களில் வரன் தேடி 10 மாநிலங்களில், 27 பெண்களை இவர் திருமணம் செய்துள்ளார். இந்த பெண்களில் சிலர் அரசு உயர் அதிகாரிகளாகவும், டாக்டர், வக்கீல்களாகவும் இருந்துள்ளனர்.

ஒருவர் இந்தோ-திபெத் எல்லை பொலிஸில் உதவி கமாண்டன்ட்டாக பணியாற்றுகிறார். ஒருவர் அசாமில் டாக்டராக பணியாற்றுகிறார். மற்றொருவர் சத்தீஸ்கரில் பட்டய கணக்காளராக உள்ளார்.

இரு மனைவிகள் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், ஒரு மனைவி புதுடெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர், இன்னொரு மனைவி கேரள அரசு அதிகாரி என உயர்ப்பதவியில் உள்ளார்கள்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad