யாழில் இலவச வகுப்பு நடத்தி 13 வயது சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த வாத்தி.


இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்று புதன்கிழமை (12) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.

கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர், தமக்கு இலவசமாக கல்வி கற்பிக்கும் ஒருவர் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad