வைத்தியசாலை குளியலறையில் வைத்து 15 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த போலீஸ் கான்ஸ்டபிள்.

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் மீது மொனராகலை வைத்தியசாலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலி.யல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பிரிவு பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

துன்புறுத்தப்பட்ட சிறுவன் மார்ச் 16 அன்று  வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் மார்ச் 17 அன்று மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

வைத்தியசாலையின் 02 ஆம் வார்டில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை, மொனராகலை வைத்தியசாலையின் பொலிஸ் கான்ஸ்டபிளினால் குளியலறைக்கு அன்றிரவு அழைத்துச் சென்றபோது, ​​தான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்த சிறுவன் வார்டுக்கு பொறுப்பான வைத்தியருக்கு அறிவித்துள்ளார். 

இதனால் வைத்தியசாலை பொலிஸாருக்கும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கும் வைத்தியர் அறிவித்துள்ளார். மொனராகலை வைத்தியசாலை பொலிஸ் உயர் அதிகாரிகள் சம்பவத்தை அடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் மொனராகலை தலைமையகப் பொலிஸில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி திருமதி நிசன்சலா லக்மாலியிடம் நடத்திய விசாரணையில், இவ்வாறானதொரு சம்பவம் தொடர்பில் தனக்கு தெரியவந்துள்ளதாகவும், அது தொடர்பில் எதுவும் கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரியவின் பணிப்புரையின் பேரில் மொனராகலை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சுலேகா சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad