காதலை கைவிடாத 16 வயது மகளை அடித்து ஏரியில் மூழ்கடித்து கொன்ற பெற்றோர்.

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(50). விவசாயி. இவரது மகள் ஸ்பூர்த்தி (16). இவர் பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

 இந்நிலையில், இந்த பள்ளி மாணவி சிவா (25) என்பவரை, காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்களது காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதனிடையே நேற்று முன்தினம் இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் மாணவி சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பாகலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவியின் பெற்றோரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் காதலை தொடர்ந்ததால் ஆத்திரத்தில் மகளை கடுமையாக தாக்கி ஏரியில் மூழ்கடித்து கொன்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது அம்பலமானது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி, உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad