வவுனியாவில் பெற்ற மகளை தூங்கும் போது துஸ்பிரயோகம் செய்த தந்தை. தாயும் உடந்தை.

வவுனியா தோணிக்கல் பகுதியில் தன் சொந்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் சந்தேகத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இன்றைய தினம் பாடசாலைக்கு சென்ற பாதிக்கப்பட்ட சிறுமி ஆசிரியையிடம் இன்று காலை தான் விழித்தெழும்போது ஆடையின்றி இருந்ததாக தெரிவித்ததை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்கு பாடசாலையால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது

துரிதமாக செயல்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரனை செய்ததில் சிறுமியின் தந்தையான 36 வயதுடையவரை கைது செய்துள்ளனர் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

எனினும் இதற்கு முன்னரும் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார் எனவும் அது தொடர்பாக தாயிடம் தெரிவித்தும் தாயார் அதனை கருத்தில் கொள்ளவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் சிறுமியின் தாயாரையும் கைது செய்யும் முயற்சியை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தலமை பொலிஸ்நிலைய சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க தலமையிலான சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரியின் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad