Homejaffna newsயாழில் கடலில் குளிக்க சென்ற இருவர் உயிரிழப்பு. யாழில் கடலில் குளிக்க சென்ற இருவர் உயிரிழப்பு. Sriraam March 20, 2024 யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போன நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Tags jaffna news Newer Older