பள்ளி காதலியை காண கனடாவில் இருந்து பிரான்சு வந்த இளைஞன்.. ரவுடிகளை வைத்து தாக்கிய முன்னாள் கணவன்.

வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட, கணவனைப் பிரிந்து ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வரும் பெண் ஒருவரும் இன்னொரு ஆணும் சுவிட்சர்லாந்தில் தமிழ் ரவுடிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிசாரின் தகவலின்படி 4 பேர் கொண்டவர்களே தாக்கியுள்ளார்கள்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள், பிரான்சிலிருந்து பார்சல் வழியாக சுவிஸ்சுக்குள் ரயிலில் வந்துள்ளார்கள். அதன் பின் உள்ளூர் ரயிலில் சூரிச் வந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

கனடாவிலிருந்து சுற்றுலாப் பயணியாக வந்த ஒருவரும் சுவிஸ் குடியுரிமையுள்ள பெண்ணுமே தாக்குதலு்ககு உள்ளாகியுள்ளார்கள். குறித்த பெண், தனது முன்னாள் கணவரின் துாண்டுதலின் பேரிலேயே தாக்குதல் நடந்துள்ளதாக பொலிசாருக்கு முறையிட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவரை தனக்கு ஏற்கனவே தெரியும் எனவும், அவர் தனது முன்னாள் கணவரின் உறவினர் எனவும் பொலிசாருக்கு பெண் முறையிட்டுள்ளார்.

சூரிச் ஹிட்னாவ் பகுதியில் உள்ள குறித்த பெண்ணின் வீட்டுக்கு அத்துமீறி நுளைந்த 4 பேர் குறித்த பெண்ணையும் அவளுடன் தங்கியிருந்த சுற்றுலாப்பிரயாணியான ஆணையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்கள்.

குறித்த ஆண் முகம் மற்றும் உடல் பகுதிகளில் அடிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். பெண்ணின் 7 வயது மகன் எந்தவித காயங்களும் இன்றி மீட்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இதே வேளை சுவிஸ்லாந்தில் உள்ள தமிழ் உறவுகளின் தகவலின் படி வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான ஞானதேவன் சசிகலா என்பவரும் கனடா நாட்டைச் சேர்ந்த வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட தயாளநேசன் என்ற 36 வயதாக குடும்பஸ்தருமே தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என தெரியவருகின்றது.

சசிகலா கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கணவரை விவாகரத்து செய்து தனது 7 வயது மகனுடன் வாழ்ந்து வருகின்றார். தயாளநேசன் சசிகலாவின் முன்னாள் காதலன் என்றும் வவுனியாவில் இருவரும் பாடசாலையில் கற்கும் போது காதலித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

தயாளநேசன் மல்லாவியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் முடித்து கனடாவில் வாழ்ந்து வருகின்றார். அவருக்கும் 3 குழந்தைகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலா கொடுது்த தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தொடர்பான நடவடிக்கைகளைப் பொலிசார் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad