யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்களால் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது , பழுதடைந்த உணவுகள், இறைச்சி கறிகள் என்பன மீட்கப்பட்டதுடன், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலான சூழல்கள் அவதானிக்கப்பட்டது.
அதனை அடுத்து உரிமையாளருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் 20 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுக்களை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் , 20 குற்றச்சாட்டுக்களுக்கு 2 இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.