இளம் மனைவியின் கழுத்தில் கத்தரிக்கோலால் குத்திய கணவன் கைது.

வத்தளை நகரில் உள்ள மருத்துவ பரிசோதனை நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று (15) காலை, அப்பெண் பணிபுரியும் மருத்துவ பரிசோதனை நிறுவனத்திற்கு வந்த அவரது கணவர், அவருடன் தகராறு செய்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில், கணவர் அதே இடத்தில் கிடைத்த கத்திரிக்கோலால் அவரது கழுத்து பகுதியில் தாக்கியது தெரியவந்துள்ளது.

பின்னர், சந்தேக நபர் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad