வெள்ளவத்தை பிரபல ஆடை விற்பனை நிலையம் தீயில் கருகியது. Video

கொழும்பு – வெள்ளவத்தையில் உள்ள ஆடையகத்தில் சற்றுமுன் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் ஆடை விற்பனை நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆடையகத்தில் இருந்த பொதுமக்கள் உட்பட பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாலை ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் கோளறு காரணமாகவே இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad