வவுனியாவில் விபத்து. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு.

சற்று முன் வவுனியா ஓமந்தையில் கோர விபத்து முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழப்பு

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

டிப்பர் வாகனமும் கப் வாகனமும் மோதுண்டு இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வீடியோ 👉https://youtu.be/I2gMisLGrFg?si=TzQCIbB6PWnHOaL0

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad