பல்கலை மாணவியை கட்டியணைத்த 80 வயது தொழிற்சாலை உரிமையாளர்!

 பஷன் டிசைனிங் பட்டப்படிப்பைக் கற்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பட்டப்படிப்புக்குத் தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக பற்றிக் தொழிற்சாலை ஒன்றிற்கு சென்ற போது, அதன் உரிமையாளரான 80 வயதுடைய ஒருவரால் கட்டியணைக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து தப்பி வந்து பிலியந்தலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பஷன் டிசைனிங் பட்டப்படிப்பைத் தொடரும் 23 வயதுடைய மாணவி, தனது பட்டத்துக்கு தேவையான ப்ராஜெக்ட் ஒன்றிற்காக தனது காதலன் மூலம் பிலியந்தலை டோல் கனத்த பிரதேசத்தில் உள்ள பற்றிக் பட்டறைக்கு சென்றுள்ளார்.

பொலிஸ் விசாரணையில் அந்த மாணவி பஷன் டிசைனிங் பற்றி தெரிந்து கொள்வதற்காக சில நாட்களாக அந்த இடத்திற்கு சென்றது தெரியவந்தது

மாணவி மதிய உணவிற்காக உணவுப் பொட்டலத்தை எடுத்துச் சென்றதாகவும், நிறுவனத்தின் பின்பகுதியில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ​​பற்றிக் தொழிற்சாலையின் உரிமையாளரான 80 வயதுடைய நபர், “மகளே, எனக்கும் கொஞ்சம் சோறு ஊட்டி விடுங்கள்” என்று சொல்லியபடி மாணவியின் அருகில் அமர்ந்தார்.

தனது தந்தையை விட்டு வெகு தொலைவில் தங்கியிருந்த மாணவிக்கு திடீரென தனது தந்தையின் ஞாபகம் வந்து, தனது உணவுப்பொதியிலிருந்து ஒரு பிடி சோற்றை தயக்கமின்றி அவருக்கு ஊட்டியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறிது நேரத்தில் மாணவியின் அருகில் வந்த அவர், “மிகவும் சுவையாக இருக்கிறது மகளே, இன்னும் ஒரு வாய் கொடுங்கள்” என்று கூறியதுடன், மாணவியின் அந்தரங்க பகுதிகளில் அத்துமீறி தொட முற்பட்டுள்ளார். உணவுப்பொதியை அந்த இடத்திலேயே வைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்ட மாணவி, விடுதிக்கு வந்து தனது காதலனிடம் இதுபற்றி தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரும் இதுகுறித்து பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad