பொல்கஹவெல யாங்கல்மோதர பிரதேசத்தில் இருந்து மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த நான்கு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.