திடீர் சுத்து போட்ட பொலிசார்-6 அழகிகளுடன் சிக்கிய மாணவர்கள்..!

 மஹரகம பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் தகாத செயற்பாடுகள் இடம்பெற்று வந்த விடுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது விடுதியின் முகாமையாளர் 6 பேர் மற்றும் பெண்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹரகம நகரத்தை கேந்திரமாக கொண்டு மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாரிய அளவிலான தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் விடுதிகள் உருவாகியுள்ளன.

அதற்காக நகர மத்தியில் அமைந்துள்ள பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளின் மாணவர்கள் பலர் இந்த விடுதிக்கு செல்வதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வித வரம்புகளுமின்றி இந்த விடுதிகள் நடத்தப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

அதற்கமைய, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad