28 வயது மனைவியுடன் படுத்திருந்த போலீஸ் oic. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த ஆமி கணவன்.

பதியத்தலாவை பொலிஸ் பொறுப்பதிகாரி இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் ஒரு பெண்ணின் கணவரான இராணுவ லான்ஸ் கோப்ரலே தாக்குதல் நடத்தியுள்ளார்.

பதியத்தலாவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட சரணகம பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண், 53 வயதுடைய பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ சிப்பாய், தனது 28 வயது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்தவுடன், மனைவியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டார். விடுமுறையில் வீட்டுக்கு சென்றவர், மனைவிக்கு சந்தேகம் எழாத விதமாக நடந்து கொண்டார். விடுமுறையின் பின்னர், தியத்தலாவ இராணுவ முகாமுக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

கணவன் கடமைக்கு சென்றுவிட்டார் என பொலிஸ் அதிகாரிக்கு மனைவி தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால், இராணுவச்சிப்பாய் கடமைக்கு செல்லவில்லை. இரகசியமாக திரும்பி வந்து, அருகிலுள்ள வீடொன்றில் மறைந்து இருந்துள்ளார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி அந்த வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், இராணுவச்சிப்பாயின் 28 வயது மனைவியும், 53 வயது பொலிஸ் பொறுப்பதிகாரியும் ஒன்றாக தங்கி இருந்துள்ளனர்.

இராணுவச்சிப்பாய் அதிகாலை 2 மணியளவில் திடீரென வீட்டுக்குள் நுழைந்த போது, இருவரும் ஒன்றாக உறக்கத்தில் காணப்பட்டனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரியையும், தனது மனைவியையும் கொட்டான், கற்களால் கடுமையாக தாக்கினார் சிப்பாய். சமையலறையிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலையில் தாக்கினார்.

தாக்குதலின் பின்னர், லான்ஸ் கோப்ரல் காட்டுப்பாதை வழியாக பிரதான வீதிக்கு வந்து, அதிகாலை 5.30 மணியளவில் பஸ்ஸில் ஏறி மஹியங்கனை பொலிஸில் சரணடைந்தார். தாக்குதல் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தியத்தலாவ மாணிக்ககந்த இராணுவ முகாமில் கடமையாற்றும் 44 வயதுடைய லான்ஸ் கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் மயங்கி விழுந்த பதியத்தலாவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி மற்றும் கள்ளக்காதலியை பிரதேசவாசிகள் முச்சக்கரவண்டியில் பதியத்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன், காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மஹியங்கனை பொலிஸில் சரணடைந்த லான்ஸ் கோப்ரல் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பதியத்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான 28 வயதுடைய பெண் தொடர்ந்தும் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad