போலி விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனும் 24 வயதுடைய யுவதியும் ஆவர்.
டெல்லியில் இருந்து நெதர்லாந்துக்கு பயணம்
சந்தேக நபர்கள் இருவரும் இந்தியாவின் டெல்லியில் இருந்து நெதர்லாந்து நோக்கி செல்வதற்காக இன்று (26) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களின் விசாக்கள் போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த போலி விசாக்கள் நோர்வே பிரஜைகளினால் தயாரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.