யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மண்டைத் தீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்க்காவல்துறை நீதிமன்ற அனுமதியுடன் அதனை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மண்டைத் தீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்பு பணிகளை அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.