யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய சூழலில் இன்று (16) இரவு நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் 4 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
நல்லூர் ஆலயத்தின் பின்புறமாக- அரசடி சந்திக்கு அண்மையாக இளைஞர் குழுவொன்றின் மீது மற்றொரு குழு வாள்வெட்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் 4 இளைஞர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்த ஒரு இளைஞன் இரத்தம் வழிந்தோடிய நிலையில், நல்லூர் ஆலய பக்கமாக தப்பியோடி, நல்லூர் ஆலயத்தின் பின்புறமுள்ள பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக விழுந்தார்.
நோயாளர் காவு வண்டியின் மூலம் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். வாள்வெட்டில் ஈடுபட்ட குழுவினர் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.