உடலுறவால் இத்தனை நன்மைகளா….? திருமணமானவர்களுக்கு மட்டும்…

திருமணம் ஆனவர்கள் துணையுடன் உடலுறவு ஈடுபடுவது குறித்த பதிவு இது வாய்ப்புகள் அமையாது, நாம் தாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என சூப்பர் ஸ்டாரே கூறினாலும். சில சமயங்களில் தானாகவே வாய்ப்புகள் அமைவதும் உண்டு. கடின உழைப்பை தாண்டி, சிலருக்கு அதிஷ்டம் இருக்க வேண்டும் என கூறுவதுண்டு. அந்த அதிஷ்டம் இருப்பவர்களுக்குதான் இந்தமாதிரியான வாய்ப்புகள் அமையும். ஆண்கள் எப்போதும் உடலுறவு வைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அமைத்துக்கொள்வதில் குறியாய் இருப்பார்கள்.

ஆனால், உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை விட, சில சமயம்தானே உருவாகும் நேரங்களில் நீங்கள் கட்டாயம் உடலுறவு வைத்துக் கொண்டால் உங்கள் மனமும், வாழ்க்கையும் சாந்தியடையும்.

உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலமாக உடல்திறன் அதிகரிக்கிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. உடலுறவு வைத்துக் கொண்ட பின்பு உங்கள் உடல் புத்துணர்ச்சி அடைகிறது. மற்றும் மனது இலகுவாகிறது.

இதனால் உங்கள் உடல்சோர்வும், மன சோர்வும் விலகும். அதிலும் நீங்கள் காலை வேளைகளில், உங்களது கடுமையான நாட்களில், உடற்பயிற்சி செய்தபின்னர், நீங்கள் மன இறுக்கமாக உணரும் போது போன்ற சில தருணங்களில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளும்போது நீங்கள் புத்துணர்ச்சி அடைகிறீர்கள். இதனால் உங்களது மன நிலை நல்ல மாற்றம் அடையும். இதுபோல சில தருணங்களில் நீங்கள் உடலுறவு மேற்கொள்வது உங்கள் நலத்திற்கு நல்லது…

முக்கியமான நாட்கள்
நீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமான நாட்களாக கருதும் நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படுத்தும். நீங்கள் அலுவலக வேலையாக ஏதேனும் முக்கிய சந்திப்புகளுக்குபோகும் முன்னர் அல்லது நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால் முக்கிய போட்டிகளில் பங்குப் பெறும் முன்னர் உடலுறவுக் கொள்வது உ ங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும், மன அழுத்தத்தை குறைக்கும். எனவே, நீங்கள் நல்ல முறையில் செயல்பட உடலுறவு வைத்துக்கொள்வது உதவும்.

காலை பொழுதுகளில் நீங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த கொதிப்பு குறைகிறது மற்றும் மன அழுத்தம் நீங்குகிறது என ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர். (இதுக்கெல்லாமா ஆராய்ச்சி பண்றாங்க!!!) சரி உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால் நல்லது தானே!!!

நோய் எதிர்ப்பு சக்தி
உடலுறவு வைத்துக்கொள்வதன்மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, சாதாரணகாய்ச்சல், சளிபோன்ற சாதாரண நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, உடலுறவு வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.

14 நாளில்…
பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20 % பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உட லுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.

உடற்பயிற்சி செய்த பின்னர்…
உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.

மன உளைச்சல்
ஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளிவர உடலுறவு வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது.

அச்சப்படும் போது
சிலதருணங்களில் ஏதேனும் சில காரணங்களுக்காக நீங்கள் அச்சப்படநேரிடும். அதுபோன்ற உணர்வுகளில் இருந்து எளிதாக வெளி வரவேண்டும் எனில் உடலுறவில் ஈடுப்படுவது சரியான தீர்வு என கூறப்படுகிறது.
Tags

Top Post Ad

Below Post Ad

உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.