5 கணவன்மார்களுடன் வாழ்ந்த திரௌபதி எப்படிப் பத்தினியாவாள்?

மகா­பா­ர­தத்தில் அனை­வ­ரது சர்ச்­சையைக் கிளப்­பி­விட்ட விடயம் இது. அண்ணன் தம்­பிமார் ஐவர்க்கு ஒரு மனை­வியா? அப்­ப­டி­யானால், எவ்­வாறு சண்­டை­யில்­லாது வாழ்க்­கையைக் கூறு­போட்­டார்கள்? எல்­லோ­ருமே எப்­படி ஏகமன­தாக ஏற்றுக் கொடண்­டார்கள்?

தமிழர் பண்­பாடு ஒரு­வ­னுக்­கொ­ருத்தி என்­ப­துதான். ஆனால் திரெ­ள­பதை ஐவ­ருக்­கொ­ருத்­தி­யான மர்மம் இன்றும் பல­ருக்கும் புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது.

உண்­மையில் நடந்­த­துதான் என்ன? பாஞ்­சால தேசத்தின் மன்னன் துரு­பதன். தனது மகள் திரெ­ள­ப­திக்கு திரு­மணம் நடத்தி வைப்­ப­தற்­காக சுயம் வரத்தில் ஒரு போட்­டி­யையும் வைத்தார்.

பாண்­ட­வர்கள் ஐவரும் பாஞ்­சால தேசத்தில் நடை­பெற இருந்த சுயம்­வ­ரத்­திற்குச் சென்­றனர். அப்­போது தான் வியா­சக முனிவர் ஒரு வர­லாற்று உண்­மையை விப­ரித்தார். முனிவர் ஒரு­வ­ருக்கு அழ­கிய பெண் இருந்தாள், அவ­ளுக்கோ திரு­மணம் நடை­பெறக் கால­தா­மதம் ஆகிக் கொண்டே இருந்­தது. அப்­பெண்ணோ “தனக்கு திரு­மணம் விரைவில் நடை­பெ­ற­வேண்டும்” என்று பர­ம­சி­வனைக் குறித்து கடுந்தவம் செய்தாள்.

பர­ம­சி­வனும் அவள் முன்பு தோன்­றினார். “பெண்ணே!, நீ விரும்­பிய வரத்தைக் கோள்” என்­றாராம். அந்தப் பெண்ணும் மிகுந்த பய­பக்­தி­யுடன் எம் பெரு­மானே!, நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று பணிந்தாள்.

பர­ம­சிவன் பதி­லேதும் கூறாமல் நின்றார். அப் பெண்­ம­ணியோ, தான் வேண்­டிய வரத்தை திரும்பத் திரும்பக் கூற­லானாள். இவ்­வாறு அவள் ஐந்து தட­வைகள் “நற்­கு­ணங்­களைக் கொண்­ட­வரை நான் கண­வ­னாகப் பெற வரமருளுங்கள்” என்று வேண்­டினாள்.

ஐந்தாம் முறை­யாக அப்பெண் கூறிய பின்பு பர­ம­சிவன் குறுநகை புரிந்தார். “பெண்ணே!, நீ விரும்­பிய வண்­ணமே நற்­கு­ணங்கள் நிறைந்த ஐந்து கண­வர்­களைப் பெறு­வா­யாக” என்று வர­ம­ரு­ளினார்.

“நான் ஒரு­வ­ரைத்தான் மணக்க விரும்­பு­கிறேன் ஆனால் நீங்கள் ஐவரை மணக்க வேண்­டு­மென அருளிச் செய்­தீர்­களே” என்று அப்­பெண்­மணி மெய் சிலிர்க்கக் கேட்டாள்.

“பெண்ணே…நீ ஐந்து முறை வரம் கேட்டாய் நானும் அரு­ளி­விட்டேன், அடுத்த பிற­வியில் நீ இந்த வரத்தின் படி கண­வர்­களைப் பெறுவாய்” என்று கூறி, பர­ம­சிவன் மறைந்தார். பர­ம­சி­வனால் வரம்­பெற்ற அப்பெண்தான் துரு­பதன் புத்­தி­ரி­யான திரெ­ள­ப­தை­யாவாள் என்று கூறி­மு­டித்தார் வியா­சக முனிவர்.

திரெ­ள­ப­தியை சுயம்­வ­ரத்தில் மணக்க துரு­பதன் ஒரு போட்டி வைத்­தி­ருந்தான். சுழலும் சக்­க­ரத்தின் நடுவில் உய­ரத்தில் ஒரு மீன் இருக்கும். கீழே உள்ள நிழலை நோக்­கி­ய­ப­டியே மேலே சுற்றும் மீனைக் குறி­பார்த்து அம்­பினால் எய்து வீழ்த்த வேண்டும் அதுதான் நிபந்­தனை.

இப்­போட்­டியைக் கண்­டு­ க­ளிக்­கவும் அதில் பங்­கு­பற்றி திரெ­ள­ப­தியை மனை­வி­யாக அடைய ஆவல் கொண்ட மன்­னர்­களும் கூடி­யி­ருந்­தனர். அக் கூட்­டத்தில் துரி­யோ­தனன், கர்ணன் இவர்­க­ளுடன் அந்­தணர் வேடத்தில் இருந்த பாண்­ட­வர்­களும் இருந்­தார்கள்.

போட்டி விறு­வி­றுப்­பாக ஆரம்­ப­மா­னது. பல நாட்டு மன்­னர்கள் வில்லில் நானேற்ற முடி­யா­த­வர்­க­ளாகத் தோற்றுப் போயினர். துரி­யோ­தனன் போன்­றோரும் வில்லின் வேகத்தால் கீழே விழுந்­தனர். கர்ணன் தன்­னு­டைய திற­மையால் நானேற்றி மேலே சுழல்­கின்ற மீனை வீழ்த்தி விடலாம் என்று உற்­சா­கத்­துடன் எழுந்தான்.

சபை­யிலே ஒரே உற்­சாகம் “நிச்­சயம் கர்ணன் வெற்­றி­பெற்று திரெ­ள­ப­தியை மணந்­து­கொள்வான்” என்று பேசிக் கொண்­டதும் திரெ­ள­ப­தியின் செவிப்­ப­றை­யிலும் முட்­டி­மோ­தி­யது. கர்ணன் வில்லைத் தொட்டு வளைக்கும் நேரத்தில் திரெ­ள­பதி தன் தோழி­யிடம் உரக்கக் கூறினாள்.

“ஒரு தேரோட்­டியின் மகன் இந்தப் போட்­டியில் வென்றால் நான் அவனை மணந்து கொள்ள மாட்டேன்” என்றாள். வில்லை வளைக்க முயன்ற கர்­ணனின் காது­களில் அவை இடி ஓசை­யாக ஒலித்­தது.

அக்­கினி மின்னல் அவன் உணர்­வு­களை ஊடு­ரு­விற்று. அவ­மா­னமும், வெறுப்பும் கர்­ணனைப் புடை­சூழ, வில்லை கீழே வைத்­து­விட்டு தனது இருக்­கையை நோக்கி நகர்ந்தான்.

அந்­தணர் வேடத்தில் இருந்த அர்ச்­சுனன் சுயம்­வ­ரத்தில் வென்று திரெ­ள­ப­தியை மணக்கும் தகுதி பெற்றான். துரு­பத மன்­னனின் ஆசி­யுடன் பெரி­யோர்­களின் வாழ்த்­துக்­க­ளு­டனும் அர்ச்­சுனன் திரெ­ள­ப­தி­யையும் அழைத்துக் கொண்டு தருமர், பீமன், நகுல, சகா­தே­வ­னு­டனும் இல்லம் வந்­த­டைந்­தனர்.

வாயிலில் நின்ற வண்ணம் “தாயே!, நாங்கள் மாங்­கனி ஒன்றை கொண்டு வந்­தி­ருக்­கின்றோம்” என்று பாண்­ட­வர்கள் கூற குந்­தி­தே­வியும் இல்­லத்­துள்ளே இருந்­த­வாறே “அவ்­வா­றாயின் ஐவரும் அதைப் பகிர்ந்து கொள்­ளுங்கள்” என்று மொழிந்தாள்.

“அர்ச்­சுனா போட்­டியில் வெற்றி பெற்ற நீயே திரெ­ள­ப­தியை மணக்க வேண்டும் தாய் கூறி­யதை நீ தவ­றாக எடை­போட வேண்டாம்” என்­று­ரைத்­தார்கள் சுகோ­த­ரர்கள். “வியா­சக முனிவர் நமக்கு உரைத்­தப்­படி தாயின் வாக்கு பொய்ப்­ப­தற்­கில்லை எனவே ஐவ­ருமே மணந்து கொள்வோம்” என்றான் அர்ச்­சுனன்.

பின்பு திரெ­ள­ப­தியின் முடிவை அறிய விழைந்த­ போது, தாய் குந்திமாதே­வியின் வாக்கை தெய்வ வாக்­காகச் சிர­மேற்று ஐவ­ரையும் மணக்க இசைந்தாள் திரெ­ள­பதி. பாண்­ட­வர்­களின் மனப் போராட்­டத்தைப் போக்க வியா­சகர் அங்கு வந்தார். பாண்­ட­வர்கள் தேவ­கு­மா­ரர்கள் என்றும் திரெ­ள­பதி லட்­சு­மியின் அம்சம் பெற்­றவள் என்றும் கூறினார். மேலும் பர­ம­சி­வ­னிடம் பெற்ற வரமே இது என விளக்­க­ம­ளித்தார்.

பாண்­ட­வர்கள் ஐவரும் திரெ­ள­ப­தியை மணந்து கொண்­டதும் தங்­க­ளுக்குள் ஒரு விதி­மு­றையை வகுத்துக் கொண்­டார்கள். ஒரு வருடம் ஒரு­வ­ரோடு திரெ­ள­பதி மனை­வி­யாக வாழ­வேண்டும். அவ்­வாறு அவர்கள் வாழும் ஓராண்டு காலமும் மற்ற நான்கு பாண்­ட­வர்­களும் அவர்­களைப் பார்க்கக் கூடாது. இவ் விதியை மீறிப்­பார்த்தால் அவர்­களைப் பார்த்­தவர் ஓராண்டு கான­கத்தில் வசிக்க வேண்டும்.

5 கணவன்மார்களுடன் வாழ்ந்த ஒருத்தி எப்படிப் பத்தினியருள் ஒருவராக ஆனாள்?

5 கணவன்மாருடன் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டு ஒண்ணும் திரெளபதி அர்ச்சுனனுக்கு மாலையிடவில்லை. என்றாலும் இதிலும் ஒரு அர்த்தமும், தாத்பரியமும் இருக்கிறது என்பதாலேயே இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
5 கணவன்மாருடன் வாழ்ந்த திரெளபதி முறையே ஒருத்தருடன் ஒரு வருஷம் என்ற கணக்கில் வாழ்ந்தாள். ஒரு வருஷம் முடிந்ததும் “அக்னிப் பிரவேசம்” செய்து தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டுதான் அடுத்த கணவனுடன் வாழ்ந்தாள்.

இன்றைக்கும் கணவனைப் பிரிந்த மனைவியரும் சரி, இல்வாழ்க்கை நன்கு அமைய வேண்டுபவரும் சரி. திரெளபதி அம்மன் கோவிலில் “தீ மிதி” என்னும் பூக்குழியில் இறங்கித் தங்களைப் புனிதப் படுத்திக் கொள்வதைப் பார்க்க முடியும்.

ஒருமுறை பஞ்ச பாண்டவரின் வனவாசத்தின் போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். அன்று திரெளபதி பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அமைந்தது. பீமனுக்கு ஏற்கெனவே சந்தேகம். இந்தப் பெண்மணி எப்படி எல்லாரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறாள். என்று. அதுவும் இப்போது கிருஷ்ணர் வேறு வந்திருக்கிறார்.

திரெளபதிக்கு அண்ணன் முறை. அவர் முன்னால். பீமன் முகம் சுருங்கிக் கிடந்தது. கிருஷ்ணர் ஒருவாறு ஊகித்துக் கொண்டார். திரெளபதியைக் கண்களால் பார்த்துச் சிரித்தார். திரெளபதியும் கிருஷ்ணரைப் பார்த்துச் சிரித்தாள்.

பீமனுக்குக் கோபம் வந்தது. என்றாலும் தனிமைக்காகப் பொறுமையுடன் இருந்து, தனிமையில் கிருஷ்ணரைச் சந்தித்து,. ‘கிருஷ்ணா, உனக்கே இது நியாயமா? இவ்வளவு நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், எனக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்று முதல் ஒரு வருஷத்திற்கு மனைவி, என்றால் என்னால் எப்படி ஏற்க முடியும்? நீயானால் சிரிக்கிறாய்! திரெளபதியும் சிரிக்கிறாளே!’ என்று கேட்டான்.

கிருஷ்ணர் சொன்னார்: ‘பீமா, நடப்பவை எல்லாம் உன்னைக் கேட்டு நடக்கவில்லை. ஏற்கெனவே இது இவ்வாறு நடக்கும் என்று சொல்லி இருப்பது தான் நடக்கிறது. இதில் நீ வருந்த ஒரு காரணமும் இல்லை. இருந்தாலும் உன் ஆறுதலுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன், கேள்!

இன்றிரவு திரெளபதி நள்ளிரவில் தனியாக வெளியில் செல்வாள் அல்லவா?” என்று கேட்டார். ‘ஆம், பார்த்திருக்கிறேன். ஒரு வருஷம் முடிந்ததும் ஒவ்வொரு நள்ளிரவிலும் வெளியே சென்று விட்டுப் பின் உதயத்தில் திரும்பி வருவாள்.’ என பீமன் சொல்ல, ‘அப்போது திரெளபதி எப்படி இருப்பாள்?’ என்று கிருஷ்ணர் கேட்க, பீமனோ, ‘புடம் போடப் பட்ட புதுப் பொன்னைப் போல் ஜொலிப்பாள். அவள் முகத்தின் தேஜஸ் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.’ என்று சொல்கிறான்.

‘பீமா, இன்றிரவு அம்மாதிரித் திரெளபதி வெளியே போகும்போது நீயும் உடன் போய்ப் பார்.’ என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அன்றிரவில் நள்ளிரவில் திரெளபதி வெளியே போக பீமனும், கிருஷ்ணனும் அவளுக்குத் தெரியாமல் தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்து இருந்து பார்க்கும் வேளையில் தீ மூட்டிய திரெளபதி, தானும் அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்ற ஓட முயற்சிக்கத் தடுக்கிறார், பரந்தாமன்.

‘அங்கே பார்!’ என்கிறார். என்ன ஆச்சரியம்! தீக்குள் திரெளபதியா தெரிந்தாள்? சாட்சாத் அந்த அகிலாண்டேஸ்வரி, சர்வ உலகத்தையும் காத்து அருளும் மஹா சக்தி, அன்னை தன் சுய உருவில் காட்சி அளிக்கிறாள். அவளைத் தீயும் சுடுமோ? அவளே தீ, அவளே, நீர், அவளே வாயு, அவளே ஆகாயம், அவளே நிலம். சகலமும் அவளே அல்லவா? திகைத்துப் போன பீமனை அழைத்து வந்து புரியவைக்கிறார் அந்த வாசுதேவன்.

‘பீமா, நீங்கள் ஐவரும் பஞ்ச பூதங்கள் என்றால் உங்களை ஆளும் மஹாசக்தி திரெளபதி ஆவாள். அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி அவள் உங்களுக்குள் அடக்கம் இல்லை. எப்படி இந்தப் பிரபஞ்சமானது பஞ்சபூதத்தையும் வெளிக்காட்டி ஆளுமை செய்கிறதோ,

அதை ஆளுமை செய்யும் சக்தி இவளே! நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால் உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இந்தத் திரெளபதி ஆவாள். இந்த ஜீவாத்மா எப்படிப் பரமாத்மாவிடம் ஐக்கியம் ஆகிறதோ அப்படி நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள்.

உனக்கு இந்த உண்மை புரியவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன். இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும். இவளை விடக் கன்னியோ, அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே! இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரெளபதி மணம் புரிந்ததாகக் காட்டப் படும் காட்சி. இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னையே உணர்ந்தவர்கள் ஆவார்கள். நீ கவலை இல்லாமல் உன் கடமையைச் செய்.’ என்கிறார்
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad