சீதையை சிறை வைத்த அசோக வனம் பற்றி தெரியாத சில ரகசியங்கள்!

இராமயணத்தின்படி இராமரின் மனைவி சீதையை இராவணன் இலங்காபுரியில் சிறை வைத்த நந்தவனம்தான் அசோக வனம்.

இன்று இந்த இடம் சீத்தா எலிய என்கிற பெயரால் அறியப்படுகின்றது.நுவரெலியா மாவட்டத்தில் இருந்து பண்டாரவளை செல்கின்ற வீதியில் சீத்தா எலிய பிரதேசம் அமைந்து உள்ளது.

இலங்கையில் சீதைக்கு அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவில் இங்குதான் உள்ளது. உலகத்திலேயே சீதைக்கு என்று அமையப் பெற்று உள்ள ஒரே ஒரு கோவிலும் இதுதான் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் இக்கோவிலை கட்டியவர் யாழ்ப்பாண தமிழன் ஒருவர் ஆவார். கு. ச. அருணாசலம் என்பவர். இவரின் சொந்த இடம் வல்வெட்டித்துறை. இவர் சீதா எலிய பிரதேசத்தில் ஓவசியராக கடமை ஆற்றியவர்.

ஆலயத்துக்கு வடக்கே அனுமாரின் முக வடிவத்தில் ஒரு மலை காணப்படுகின்றது. சீதா பிராட்டி நீராட வருகின்றமையை இங்கிருந்துதான் அனுமார் கவனித்தார் என்று கூறப்படுகின்றது.

அனுமார் நடந்த இடம் என்று சொல்லப்படுகின்ற பகுதியில் பெரியவையும் சிறியவையுமாக பாத தடங்கள் உள்ளன.

தீயிடப்பட்ட வாலுடன் அனுமார் திரும்பிச் சென்றார் என்று கூறப்படுகின்ற மலை இன்றும் கறுத்த மரங்கள் கொண்டதாகவே காட்சி தருகின்றது.

இராவணனின் மாளிகை ஒன்று இருந்ததாக சொல்லப்படுகின்ற மலை இராண எல்லை என்று அழைக்கப்பட்டு வருகின்றது.சீதா பிராட்டி நீராடினார் என்று சொல்லப்படுகின்ற அருவி இன்றும் உள்ளது.

ஒரு காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு பூ எறிகின்றபோது பூவானது ஆற்று நீருடன் போய்ச் சேருமாக இருந்தால் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

சீதா பிராட்டி கண்ணீர் வடித்தார் என்று சொல்லப்படுகின்ற ஒரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டு அதற்குள் தண்ணீர் காணப்படுகின்றது.

ஆலயச் சுவரில் வரையப்பட்டு உள்ள ஓவியங்கள் தெய்வீகம் நிறைந்தவை. கோயிலோடு தொடர்புபட்ட இராமயண கதையைச சித்திரிக்கின்றன.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad