எயிட்ஸால் பாதிக்கப்பட்டவரின் உண்மை சம்பவம்! அனைவருக்கும் பகிருங்கள்...

என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசித்துவந்தார்கள்…குடும்பத்தலைவர் அரசு வேலையில் இருந்தார் நல்ல குடும்பம் அன்பான மனைவி அழகான குழந்தைகள்.. திடீரென அவர் உடல் காரணமில்லாமல் இளைக்க ஆரம்பித்தது… இவரும் ஏதோ காய்ச்சல் போலிருக்கிறது என்று “SELF MEDICATION” எடுத்துக்கொண்டார் ஆனால் என்ன செய்தாலும் உடல் இளைத்துக்கொண்டே போவதை தடுக்கமுடியவில்லை இந்நிலையில் ஒரு நாள் நடக்கவே முடியாமல் அவர் நடந்துபோவதை பார்த்த நான் கிராமத்தில் இருக்கும் அவர் அப்பாவுக்கு போன் பண்ணினேன் அவரும் வந்தார்..

நாங்களெல்லாம் வற்புறுத்தி HOSPITAL க்கு அழைத்துப்போனோம் அங்கு டெஸ்ட் பண்ணியபோதுதான் அவர் “HIV POSITTIVE” எயிட்ஸ் நோயாளி என தெரியவந்தது…பிறகு நடந்த கொடூரம்தான் சொல்லவே முடியாத அளவுக்கு இருந்தாது…!! அவர் அப்பாவும் அம்மாவும் HOSPITAL வாசலிலேயே அவரை விட்டுவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டார்கள்…!! அவரோ நடக்க முடியாமல் இருக்கிறார். அந்த நேரத்தில் என் நண்பர் ஒருவர் இந்த வியாதிக்கு அரசு மருத்துவமனையில் மட்டுமே நல்ல TREATMENT கிடைக்கும் என்று சொன்னார்.. பிறகு நானும் என் நண்பரும் சேர்ந்து அவரை GH ல் அட்மிட் செய்தோம்.

பிறகு பக்குவமாக அவர் மனைவியிடம் விஷயத்தை சொல்லி புரியவைத்தோம்.. அதுவரை கூட இருந்த நண்பர்கள் எல்லாம் இவர் HIV நோயாளி என்று தெரிந்த வுடன் இவரை விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்…நான் அவருடைய அப்பாவுக்கு மறுபடி போன் பண்ணி வரசொன்னேன் அதற்க்கு அவர் …..”தம்பி அவனை அப்பிடியே ஒரு டாக்சி வைத்து இங்கு கொண்டுவந்து வயலில் உள்ள மோட்டார் ரூமில் போட்டுவிடு..!! இருக்கிற வரை இருந்துவிட்டு சாகட்டும் என்றார்”…. !!

அதன் பிறகு நான் ஓர் முடிவுக்கு வந்தேன் என்ன ஆனாலும் சரி அவரை காப்பாற்ற நாம் எதாவது முயற்சி செய்யவேண்டும் என்று..அதற்கான முயற்சிகளை தொடர்ந்தேன் ! GH ல் அட்மிட் செய்து 20 நாள் TREATMENT ல் சற்று தேறியிருந்தார்…பிறகு அவருடைய அப்பா அம்மா என்று ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்… அவர்கள் பார்க்க ஆரம்பித்த உடன் நான் ஒதுங்கிக்கொண்டேன்..கிட்டத்தட்ட மறந்தே போனேன்..!!

இந்நிலையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது, அந்த அண்ணன் இரண்டு SWEET BOX எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார் பார்க்கவே ரொம்ப நல்லா இருந்தார் ” தம்பி ஒரு SWEET BOX எனக்கு பதவி உயர்வு கிடைத்ததற்கு..!!! இன்னொன்று நான் சொந்தமாக நிலம் வாங்கியிருக்கேன் அதற்க்கு ! என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.. அந்த சமயம் எனக்கு சொல்ல முடியாத அளவு சந்தோசமாக இருந்தது…!! இப்போ அவர் நலமாக இருக்கிறார்.

நண்பர்களுக்கு, “HIV” நோயாளிகளை வெறுத்து ஒதுக்காதீர்கள்… உங்களுக்கு தெரிந்து சந்தேகப்படும்படியான யாராவது இருந்தால் உடனே GH க்கு கூட்டிப்போங்கள்… நிச்சயமாக “எய்ட்ஸ்” குணப்படுத்த முடியாத நோய்தான் ஆனால் இப்போதிருக்கிற மருத்துவ வசதிகளை வைத்து மரணத்தை நிச்சயம் 15 TO 2O வருஷங்கள் தள்ளிப்போடலாம்…இதை செய்யும்போது ஒரு குடும்பம் காப்பாற்றப்படும் இல்லையா..!!
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.