இரட்டைக் குழந்தை பிறக்க யாருக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா?...

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு. நிறைய பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் மீது ஆசை இருக்கும்.
எப்போது ஒரு பெண்ணின் கருப்பையில் இருவேறு விந்தணுக்கள் நுழைந்து இரண்டு கருமுட்டைகளை கருவுறச் செய்து வெளியேற்றுகிறதோ, அப்போது தான் இரட்டைக் குழந்தை உருவாகும். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது நம் கையில் எதுவும் இல்லை. அது ஓர் இயற்கை நிகழ்வு.
இங்கு யாருக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என்று பார்க்கலாம்.
* கருவுறுதல் மருந்துகளை எடுத்து வரும் பெண்களுக்கு, இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எப்படியெனில் இந்த மருந்துகளை பெண்கள் எடுக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவருவதால், இந்நேரம் உறவில் ஈடுபடும் போது விந்தணுக்கள் கருமுட்டைகளில் நுழைந்து இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
* இரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
* இதுவரை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெரும்பாலான பெண்கள் 35 வயதிற்கும் அதிகமானோர் தான். மேலும் ஆராய்ச்சி ஒன்றிலும் இளம் பெண்களை விட, வயது அதிகமான பெண்களுக்கே இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
* ஒரு பெண் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சையை மேற்கொண்டால், இரட்டைக் குழந்தையைப் பெற்றெடுக்கும் வாய்ப்புக்கள் அதிகம். எப்படியெனில் இம்முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டைகளை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில் ஆணின் விந்தணுக்களுடன் சேர்த்து கருவுறச் செய்து, பின் மீண்டும் அந்த கருமுட்டையை பெண்ணின் கருப்பையினுள் வைக்கும் போது, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டைகள் கருவுற்று கருப்பையினுள் செலுத்துவதால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சில நேரங்களில் ஒரே ஒரு கருமுட்டை இரண்டாக பிளவுபட்டு இரட்டைக் குழந்தைகளாக உருவாகும்.
* உயரமான மற்றும் ஆரோக்கியமான பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாம். மேலும் ஆய்விலும் அது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயரமான பெண்களின் உடலில் வளர்ச்சிக்கு காரணியான இன்சுலின் அதிகம் இருப்பது தான் என்று கூறுகின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad