அநாதை இல்லம் என்ற பெயரில் அரங்கேறிய பாலியல் தொழில்

ஆகஸ்ட் 30 ஆம் திகதி மாலை 3 மணி­ய­ளவில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க காரைக்­குடி டி.ஸ்.பி அலு­வ­ல­கத்­துக்கு ஓடி வந்தாள் 14 வயதுச் சிறுமி.

அவ­ளுடன் 12 வயதில் மற்­றொரு சிறுமி நேராக டி.ஸ்.பி. அறைக்குச் சென்ற அவள் கூறி­யதைக் கேட்ட டி.ஸ்.பி கார்­த்தி­கே­ய­னுக்கோ கடும் அதிர்ச்சி!

அவள் கூறி­யது இதுதான் :

என் பேரு பத்­ம­பி­ரியா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது). இவள் என்­னு­டய தங்­கச்சி கற்­பகம். பக்­கத்­துல அரி­யக்­கு­டிதான் சொந்த ஊர். வீட்­டுல கஷ்டம். அதனால் காளவாய் பொட்­ட­லி­லுள்ள ஒரு வீட்.டில் வேலைக்குச் சேர்த்­து­விட்­டாங்க எங்­கம்மா. அங்க கொஞ்ச நாள் நல்­ல­ப­டி­யாத்தான் வேலை செஞ்­சு­கிட்டு இருந்தேன்.

திடு­திப்­புன்னு இன்­னொரு வீட்­டுல வய­சான அம்மா இருக்­காங்க அவங்­களைப் பார்த்­துக்­கனும் என்று சொல்லி இப்ப நாங்க இருக்­கிற வீட்­டிற்கு கூட்­டிட்டு வந்­தாங்க.

அங்க போன­துக்கு அப்­புறம் தான் தெரிஞ்­சது அது எங்­கள மாதிரி சின்னக் குழந்­தை­களை வைத்து விப­சாரம் செய்­யிற இடம் என்று. வீட்­டுக்கும் போக முடி­யாது வெளிய சொன்­னாலும் பிரச்­சினை. முரண்டு பிடிக்­கிற என்னை மாதிரி புள்­ளை­களை மிரட்டி சூடு வைச்சு கஸ்­ட­மர்­கள்­கிட்ட போகச் சொல்­லு­வாங்க. முடி­யா­துன்னா தொலைஞ்சோம்.

வாரா­வாரம் எங்­கம்மா வந்து இவங்க கொடுக்­கிற பணத்தை வாங்­கிட்டு வீட்­டுக்குப் போயிடும். அப்­புறம் தான் தெரிஞ்­சுது எங்க அம்­மா­வுக்கும் இந்த விடயம் தெரியும் என்று. எனக்கு நடக்­கிற கொடுமை யாருக்கும் நடக்­கக்­கூ­டா­துன்னு நினைக்­காத சாமி இல்லை. அப்­பதான் என்ன மாதி­ரியே என் தங்­கச்­சி­யையும் இங்கே கொண்டு வந்து விட்­டாங்க. அதைப் பொறுக்க முடி­யா­மத்தான் இந்தப் புகாரைக் கொடுக்­கிறேன் என்றாள். பால்­மணம் மாறாத 14 வயதுச் சிறுமி இப்­படிச் சொன்னால் யாருக்­குத்தான் அதிர்ச்­சி­யாக இருக்­காது.

அதி­ரடி நட­வ­டிக்­கையில் இறங்­கினார் டி.எஸ்.பி. கார்த்­தி­கேயன். சிறு­மிகள் கூறிய காரைக்­குடி செக்­காலை ரோடு முதல் வீதி நட­ராஜா தெரு­வி­லுள்ள வீட்டில் பாலியல் தொழிலில் ஈடு­பட்டு வந்த பூமயில் அவ­ரது மகள் சொர்­ண­லதா ஆகி­யோரைக் கைது செய்து சிறையில் தள்­ளினார். மேலும் அங்­கி­ருந்த சிறு­மி­க­ளையும் பொலிஸார் மீட்­டனர். இதற்குப் பிறகு தான் அந்த வீட்டில் பாலியல் தொழில் நடந்­ததே அப்­ப­குதி மக்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.

காரணம் அந்த இரு பெண்­களும் தாங்கள் அநாதை ஆசி­ரமம் நடத்­து­வ­தாகக் கூறி அப்­ப­குதி மக்­களை நம்ப வைத்­தி­ருக்­கின்­றனர். மேலும் அநாதை இல்லம் என்­பதால் அந்த வீட்­டிற்கு அட்­வான்ஸ்­கூட வாங்­க­வில்லை என்று புலம்­பினார். வீட்டின் உரி­மை­யாளர்.

விசா­ர­ணையில் சில பணக்­காரக் கஸ்­ட­மர்கள் மேற்­படி மேட்­ட­ருக்கு வரும்­போது அதை மறைந்­தி­ருந்து வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. இதில் காரைக்குடியில் புகழ்பெற்ற நகைக்கடை அதிபரும் பஸ் உரிமையாளரும் அடக்கமாம். இவர்களுக்கு ரிட்டையர் பொலிஸ் அதிகாரியின் மகனும் சப்போர்ட்டாம்!
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad