உங்க உண்மையான காதல்னா இந்த அறிகுறிகள் இருக்கனுமாம் பாஸ்...

தற்போது காதல் செய்து சந்தோஷமாக இருப்பவர்களை விட, காதல் தோல்வியில் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இதற்கு காதலிக்கும் நபர் நம்மை உண்மையாக காதலிக்கிறாரா என்று தெரியாமல், கண்மூடித்தனமாக காதலில் விழுவது, காதலித்த பின்னர் அதை மறக்க முடியாமல் தவிப்பது... ஆகியவற்றை முக்கியக் காரணமாக சொல்லலாம்.

மனதை தெளிவாகவும், கட்டுப்பாட்டுடனும் வைத்துக் கொண்டு, பின் காதல் செய்து வந்தால், நிச்சயம் அந்த காதல் தோல்வி அடையாது. அதை விட முக்கியமானது எடுத்த முடிவில் உறுதி.. நீதான் என் இறுதி என்று எவன் அல்லது எவள் கூறுகிறாரோ அந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்கும்….

நீங்கள் யாரையேனும் காதலிக்கிறீர்களா? உங்கள் காதலன்/காதலி உங்களை உண்மையாக காதலிக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் முதல்ல உங்கள் துணையிடம் இந்த அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க… அப்புறம் காதலை தொடருங்க…

தியாகம்

உண்மையான காதலின் முதல் அறிகுறி, நம்மை உயிருக்கு உயிராக காதலித்த காதலன்/காதலியின் சந்தோஷத்திற்காக எதையும் தியாகம் செய்வது. அத்துட எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.

பல முயற்சிகளை எடுப்பது

காதலை வெளிப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுப்பது. அதாவது நீங்கள் காதலில் விழுந்த பின்னரும், உங்கள் காதலன்/காதலி உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயல்வதோடு, ஒவ்வொரு நாளும் உங்களை அவரது ஸ்பெஷலாக உணர வைத்தால், அதுவும் உண்மைக் காதலே!

கஷ்டப்படுத்த கூட நினைக்கமாட்டார்கள்

உண்மையிலேயே காதல் இருந்தால், உங்கள் காதலன்/காதலியால் நீங்கள் கஷ்டப்படுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதற்காக நீங்கள் எவ்வளவு தான் அவர்களை கஷ்டப்படுத்தினாலும், அவர்கள் பதிலுக்கு உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள்.

சொல்வதைக் கேட்கிறார்களா?

உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு சத்தியம் ஏதேனும் செய்து கொடுத்து, எந்த ஒரு காலத்திலும் அதை மீறாமல் இருந்தால், அவர்கள் உங்கள் மீது உயிரையே வைத்துள்ளார்கள் என்று அர்த்தம்.

கஷ்ட காலத்தில் தோள் கொடுப்பார்கள்

உண்மையான காதலுக்கான அறிகுறிகளில் ஒன்று, கஷ்ட காலத்தில் உங்களை விட்டு நீங்காமல், தோள் கொடுத்து ஆறுதல் அளிப்பதோடு, அந்த கஷ்டத்தில் இருந்து உங்களை மீட்க முயற்சிப்பார்கள்.

நீங்கள் பெருமைப்படுகிறீர்களா?

உண்மையான காதலில் ஒன்று நீங்கள் பெருமைப்படும் படி நடப்பார்கள். அதாவது, அவர்களை நீங்கள் காதலித்ததற்கு நீங்கள் பெருமைப்படுவீர்கள். அந்த அளவில் அவர்கள் உங்களிடம் மரியாதையாகவும், உங்கள் மனதை புரிந்தும் நடந்து கொள்வார்கள்.

உங்களுக்காக கஷ்டப்பட விரும்புகிறார்களா?

உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நிறைய கஷ்டத்தை தாங்கிக் கொள்வார்கள். இந்த மாதிரியான செயலை தற்போதைய காதலர்களிடம் காண்பது மிகவும் கடினம். ஆனால் உங்கள் காதலன்/காதலி இந்த செயலைப் புரிந்தால், அவர்களை வாழ்க்கையில் இழந்துவிடாதீர்கள்.

எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள்

உங்கள் காதலன்/காதலி உங்களுக்கு பலவற்றை செய்தும், உங்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் காதலை மட்டுமே மனதில் கொண்டு பழகி வந்தால், அந்த காதலை மிஸ் பண்ணாதீங்க. ஏனெனில் இன்றைய காலத்தில் பலர் எதிர்பார்ப்புக்களுடனேயே பழகுகிறார்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் பழகுபவர்கள் மிகவும் குறைவு.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad