15 வயது சிறுமியை திருமணம் செய்த 14 வயது சிறுவன்: பிரசவத்தின் போது சிறுமி மரணம்!

துருக்கியில் 14 வயது சிறுவன் ஒருவனுக்கு 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து சிறுமி கருத்தரித்து பிரசவத்தின் போது மரணமடைந்த சோக சம்பவம் நடந்துளது.

துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாய் 14 வயது சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கர்ப்பமான சிறுமியை பேட்மேன் நகரில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்தனர்.

மிகுந்த சிரமத்திற்கு பின்னர் குழந்தை பிறந்தது, ஆனால் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் சிறுமியின் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டது. இதனால் சிறுமியின் உடல் நிலை மோசமடைந்தது.

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறு வயதிலேயே பிரசவமானதால் தான் சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags

Top Post Ad

Below Post Ad