கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி

இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தாக்குதலில் 166 பேர் காயமடைந்ததாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார்.

காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags

Top Post Ad

Below Post Ad