தந்தையை கம்பியால் அடித்து கொன்ற பாசக்கார மகன்...பேராசையின் உச்சக்கட்டம்

இந்தியாவில் கோவையில் பீளமேடுபுதூரில் வீட்டை எழுதி தர மறுத்த தந்தையை மகனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை - பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசியப்பன். 80 வயதான இவருக்கு பாலச்சந்திரன் என்ற மகன் உள்ளார்.

அம்மாசியப்பனுக்கு நகர் பகுதியில் 2 வீடுகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி அம்மாசியப்பன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அம்மாசியப்பனின் மகன் பாலச்சந்திரன் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அம்மாசியப்பன் மரணம் குறித்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. விசாரணையில் பாலச்சந்திரன் கூறியதாவது, "என் தந்தை அம்மாசியப்பன் பேரில், சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. அதை என் பெயரில் எழுதி தருமாறு அவரிடம் பல நாட்களாக கேட்டு வந்தேன். ஆனால், அவர் என் பெயருக்கு எழுதித்தர மறுத்து விட்டார்.

அவரை கொலை செய்துவிட்டால், அவருக்கு பிறகு, அந்த இரண்டு வீடுகளும் எனக்கு வரும் என்பதால், அவரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.