கொடூர விசாரணை முறைமையை தீவிரவாதிகளுக்கு அறிமுகப்படுத்தும் டிரம்ப் !

தீவிரவாதிகளை விசாரிக்க கொடூர விசாரணை முறையை கொண்டு வர, தீவிரமாக முயற்சிப்பதாகவும், குத்திய முள்ளை, முள்ளைக் கொண்டுதான் எடுக்கவேண்டும். என்பதை தான் ஆழமாக நம்புவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கேள்விப்பட்டிராத வகையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தமது போராட்டங்களையும், தண்டனைகளையும் நடைமுறை படுத்துகின்றனர். அதனால்அதற்கு பரிகாரம் செய்யும் வகையிலான முறையில் வாட்டர்போர்டிங் சித்திரவதை முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக அமெரிக்க ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கும், தீவிரவாத குற்றவாளிகளை விசாரிப்பதற்கும் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.

புஷ் வாட்டர்போர்ட் எனும் சித்திரவதை முறையை நடைமுறை படுத்தியிருந்தார். இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா குறித்த கொடூர சித்திரவதை முறைகளுக்கு தடையை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் வேற்றுமதங்களை சேர்ந்த அப்பாவி மக்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தலையை துண்டித்து படுகொலை செய்கிறார்கள்.

இந்நிலையில் நாம் அதற்கேற்ற முறையிலேயே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பதை தான் முழுமையாக நம்புவதாக குறித்த செவ்வியில் டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த விசாரணை முறையால் கைதியிற்கு ஒரு கட்டத்தில் நுரையீரல் சேதம், மூளைச்சேதம் என்பன ஏற்படுவதோடு, சிலவேளைகளில் உடல் அசைவுகள் அதிகமானால் எலும்பு உடைவுகள் மற்றும் உயிராபத்துகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.