முழு லண்டனுக்கும் மஞ்சள் எச்சரிக்கை..! திடீர் எச்சரிக்கையால் பரபரப்பு - விமான சேவைகளும் பாதிப்பு

பிரித்தானியாவில் நிலவிவரும் கடுமையான பனிமூட்டமான காலநிலை காரணமாக விமானப் போக்குவரத்துக்களில் பல்வேறு தடைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பிரித்தானியாவின் தென்பகுதி கடுமையான உறைபனிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் ஹீத்ரோ விமான நிலையத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், லண்டன் நகர விமான நிலையத்தில் 37 விமானங்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, லண்டன் முழுவதற்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த எச்சரிக்கையானது பிரித்தானியாவின் தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளிலும் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் கடுமையான உறை பனி மூட்டம் காரணமாக அடுத்த இரண்டு நாட்கள் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பனி மூட்டத்தின் தாக்கம் தொடர்ந்தும் இரண்டு நாட்களில் அதிக அளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வானிலை ஆய்வு நிலையத்தின் திடீர் எச்சரிக்கையால் பிரித்தானிய மக்களிடையே பெரும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்





Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad