ரவுடி சகோதரர்கள் வெட்டிக் கொலை; தூத்துக்குடியில் இரவில் பயங்கரம்.

தூத்துக்குடியில்  திருச்செந்தூர் சாலை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் அப்துல் கபூர்(60). இவரது மனைவி சரோஜா(58). இவர்களது மகன்கள் சலீம் என்ற முகமது சலீம், புகாரி. இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகள்.

இவர்கள் மீது 2 கொலை வழக்குகள், 3 கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா விற்ற வழக்குகள் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தூத்துக்குடி காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.   கஞ்சா விற்பனை மற்றும் கொலை வழக்குகள் தொடர்பாக இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூட்டாளியான சபரிக்கும்  முன்விரோதம் இருந்துவந்தது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வீட்டின் உள்ளே  சலீமும், வெளியே புகாரியும் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ராஜபாண்டி நகரை சேர்ந்த சபரி என்ற செல்வகுமார் (43), பாலஆறுமுகம் (44) உள்ளிட்ட 5 பேர் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

வெளியே படுத்திருந்த புகாரியை சரமாரியாக வெட்டி சாய்த்ததோடு உள்ளே சென்று சலீமையும்  வெட்டினர். அப்போது அவரும் பதிலுக்கு அரிவாளால் சபரி கும்பலை வெட்டினார். இதில் பாலஆறுமுகத்துக்கு வெட்டு விழுந்தது. ஆனாலும் புகாரி, சலீம் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  காயமடைந்த பாலஆறுமுகத்திடம் போலீசார் நடத்திய  விசாரணையில் சபரி மற்றும் சலீம், புகாரி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கூட்டாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும், தொழில் போட்டியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதும்  தெரியவந்தது.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad