குடி போதையில் மாப்பிள்ளை கலாட்டா திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

சிதம்பரம், திருமண மண்டபத்தில், மது அருந்தி, போதையில் மாப்பிள்ளை கலாட்டா செய்ததால், அதிர்ச்சிஅடைந்த மணப்பெண், திருமணத்தை நிறுத்தினார்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளையைச் சேர்ந்தவர், தர்மராஜன், 28; திருப்பூரில் உள்ள, பனியன் கம்பெனியில் பணிபுரிகிறார்.இவருக்கும், சிதம்பரம் அடுத்த, ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், நேற்று காலை, சிதம்பரத்தில் திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இரவு, இருதரப்பு உறவினர்களும் மண்டபத்தில் கூடினர்.

இரவு மாப்பிள்ளை, நண்பர்களுடன் மது அருந்தினார். போதை ஏறியதும், சமையல் அறைக்கு சென்று, சமையல்காரர்களிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள், சமைக்க முடியாது என, வெளியேறினர்.இதையடுத்து, மணப்பெண் - மாப்பிள்ளை வீட்டார் இடையே, தகராறு ஏற்பட்டு, நள்ளிரவு வரை வாக்குவாதம் நீடித்தது.

ஆவேசமடைந்த மணப்பெண், 'குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்' என தெரிவித்து, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன், நள்ளிரவே, தன் ஊருக்கு கிளம்பி சென்றார்.
நேற்று காலை, மாப்பிள்ளை தரப்பினர், மணப்பெண் திருமணத்தை பாதியில் நிறுத்தி சென்று விட்டதாக, சிதம்பரம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மோகன், இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். மணப்பெண், 'குடிகார மாப்பிள்ளையை திருமணம் செய்ய முடியாது' என, கறாராக தெரிவித்து, காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
இதனால், நேற்று நடக்க இருந்த திருமணம் நின்றதால், மாப்பிள்ளை வீட்டாரும் சோகத்துடன் சென்றனர்.
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad