லண்டன் வீதியில் இறங்கிய ஹெலி: 2 பேர் குத்திக் கொலை பெரும் பரபரப்பு

லண்டனை அடுத்துள்ள செஸ்ஹண் என்னும் இடத்தில், கறுப்பின நபர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு. தன்னை தானே குத்திக்கொண்டுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் உடனடியாக கலகம் அடக்கும் படையோடு அங்கே சென்றுள்ளார்கள். இதேவேளை அவர்களின் உயிரைக் காக்க , ஏர் அம்பூலன்ஸ் என்று அழைக்கப்படும் மருத்துவ ஹெலிகொப்ட்டரும் அங்கே விரைந்துள்ளது.

அவர்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள சந்தியில், ஹெலிகொப்ட்டர் தரையிறங்கி காயப்பட்டவர்களை மருத்துவமனை கொண்டு செல்ல தயாரானது. ஆனால் பொலிசார் வர முன்னரே அவ்விருவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. குறித்த இடத்தில் சில தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில். நேற்று மாலை அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதாக அவர்கள் அதிர்வு இணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad