3 வயது பிஞ்சுப் பெண் குழந்தை படுகொலை.

தமிழகத்தின் எர்ணாவூரில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவது, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் மீனவர் பழனி. இவரது மனைவி ராணி. இவர்களது 3 வயது மகள் ரித்திகா. நேற்று முன்தினம் மதியம் ரித்திகா வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவரைக் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த ராணி, மகளை அக்கம்பக்கத்தில் தேடினார். அருகில் உள்ள உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் பலன் இல்லை. எனவே எண்ணூர் காவல் நிலையத்தில் பழனி முறைப்பாடு செய்தார்.

போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் எர்ணாவூர், எண்ணூர் பகுதிகளில் சேகரித்த குப்பையை வாகனம் மூலம் சேகரித்து திருவொற்றியூர் கரிமேடு அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டியபோது மாயமான சிறுமி ரித்திகா வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

அவரது பின்தலையில் காயம் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் இதுபற்றி எண்ணூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீஸார் ரித்திகா சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் ரித்திகாவை யாரோ கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad