மூன்று மாணவிகள் தற்கொலை: வெளினான தகவல் என்ன?

கேரள மாநிலத்தில் பாடசாலை மாணவிகள் மூவரின் தற்கொலை குறித்து விசாரித்தபோது, மொபைல் போனில் ஒளிந்­தி­ருக்கும் ஆபத்­து­களும் வக்­கி­ரங்­களும் அதிகம். என  இந்­தியாவின் முதல் பெண் சைபர் கிரைம் கணினி குற்றவியல் நிபுணர்  தன்யா மேனன் தெரி­வித்­துள்ளார். கேரள மாநி­லத்தைச் சேர்ந்த இந்­தி­யாவின் முதல் பெண் சைபர் க்ரைம் துப்­ப­றியும் நிபுணர் என்ற பெரு­மைக்­கு­ரி­யவர் தன்யா மேனன். 39 வய­தாகும் இவர் முது­கலைப் பட்டம் பெற்­றவர்.

தற்­போது  இந்­திய பொலிஸார்,  மத்­திய, மாநில அரசுப் பணி­யா­ளர்­க­ளுக்கு பயிற்சி வகுப்­பு­களை நடத்துபவர். பல வழக்­கு­களை விசா­ரித்து பிரச்­சி­னைகள் தீர்­வ­தற்கு உத­வு­வ­தாக செய்­தி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்­துள்ளார்.
அண்­மையில் கேர­ளாவில் மூன்று பாட­சாலை மாண­விகள் வகுப்­ப­றையில் தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் தொடர்­பாக தன்யா மேனன் தெரி­வித்­துள்­ள­தா­வது, கேர­ளாவில் மூன்று பாட­சா­லை மாண­விகள் வகுப்­ப­றையில் தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இதுவே நான் விசா­ரித்த முதல் வழக்கு. மற்­றொரு  பாட­சா­லையில் படிக்கும் மாண­வர்கள், அந்த மூன்று மாண­விகள் தங்­க­ளுடன் உல்லா­ச­மாக இருந்த புகைப்­ப­டங்கள் மொபைல் போனில் இருப்­பதைக் காட்டி, தொடர்ந்து ஆசைக்கு இணங்க வற்­பு­றுத்தி, ஒத்­து­ழைக்­கா­விட்டால் அவற்றை வெளி­யி­டுவோம் என மிரட்­டி­யதால், பயந்­து­போன மாண­விகள் குடும்ப கௌர­வத்தை காப்­ப­தற்­காக தற்­கொலை செய்­து­கொண்­டது விசா­ர­ணையில் தெரியவந்­தது.

மொபைல் போனை தவ­றாகப் பயன்­ப­டுத்தி மூன்று உயிர்கள் பலி­யா­னது மிகுந்த வேதனை அளித்­தது. இணை­ய­தளம், சமூக வலை­த­ளங்கள் மற்றும் மொபைல் போனில் ஒளிந்­தி­ருக்கும் ஆபத்­து­களும் வக்­கி­ரங்­களும் அதிகம். ஆனால் அவற்றைப் பற்றி அறி­யாமல்  இளம் பரு­வத்­தினர் இன்­னல்­க­ளுக்கு ஆளா­வதைத் தடுக்க  பாட­சாலை, கல்­லூரி மாணவ மாண­வி­க­ளுக்கு விழிப்புணர்வு முகாம்­களை நடத்­து­கிறேன்.இந்த நிகழ்ச்­சியில் சமூக வலை­தளம், வட்ஸ்அப் போன்ற செய­லி­களை பயன்­ப­டுத்­தும்­போது பின்­பற்ற வேண்­டிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை விளக்­கு­கிறேன்.  அதோடு அந்­த­ரங்­க­மான தக­வல்­களை பகிர்ந்து கொண்டு பிரச்­சி­னைகள் வரு­வ­தற்கு நாமே கார­ண­ மாகக் கூடாது என்­ப­தையும் புரிய வைக்­கிறேன். இது­வரை 400க்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­களை நடத்­தி­யுள்ளேன்.

இந்­தி­யாவில் சைபர் குற்­றங்­களை எங்கு புகார் செய்ய வேண்டும், நீதி­மன்­றத்தில் எத்­த­கைய ஆவ­ணங்­களை சமர்ப்­பிக்க வேண்டும் போன்ற அடிப்­படை தக­வல்கள், படித்­த­வர்­க­ளுக்குக் கூடத் தெரி­வ­தில்லை. அப்­ப­டி­யா­ன­வர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கென ஒரு அமைப்பை நடத்தி வரு­கிறேன்.கடந்த 15 வரு­டங்­களில் பல வழக்­கு­களை விசா­ரித்து உண்­மையை வெட்ட வெளிச்­ச­மாக்கி இருக்­கிறேன். ஒவ்­வொரு வழக்கும் மர்ம நாவலின் சுவா­ரஸ்­யத்­திற்கும் விறு­வி­றுப்­பிற்கும் சற்றும் குறை­யாத திடுக்­கிடும் சம்­ப­வங்­களைக் கொண்­டவை.மோச­மான பின்­வி­ளை­வு­களால் நிஜ வாழ்க்­கையில் பலர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இவர்­க­ளுக்கு உரிய நியாயம் கிடைக்க உத­வு­கிறேன்.

மத்­திய, மாநில அர­சுகள் சம்­பந்­த­மான தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த வழக்­கு­க­ளையும் கையாண்­டி­ருக்­கிறேன். இப்­போது ஒவ்­வொரு நாளும் ஏறக்­கு­றைய 200க்கும் மேற்­பட்ட புகார்கள் வரு­கின்­றன. ஏன், எதற்கு, எப்­படி ஒரு குற்றம் நிகழ்ந்­தது என விசா­ரித்து, குற்­ற­வா­ளியை சட்­டத்தின் முன் நிறுத்­து­வது என் கடமை. நவீன தொழிற்­நுட்­பத்­திலும் இணை­ய­த­ளத்­திலும் ஒளிந்­தி­ருக்கும் அபா­யத்தை பொது­மக்­க­ளுக்கு விளக்­கு­வதும் என் பணி. சட்­டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிவிடாமல் இருக்க காலத்தின் தேவைக்கேற்ப அவ்வப்போது சட்டத் திருத்தங்களை செய்ய வேண்டியதும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சைபர் உலகம் என்பது வாழ்க்கையை எளிமையாக்கவல்லதுடன், கண்ணுக்குத் தெரியாத, கண் நழுவவிடும் ஆபத்துகளும் நிறைந்தது!"  என எச்சரிக்கிறார் தன்யா மேனன்!
உடனுக்குடன் உலக செய்திகள், நம் நாட்டு செய்திகள் சினிமா செய்திகள் மற்றும் பல வினேதங்களையும் அறிந்திட Like 👍செய்யுங்கள்


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad