மூலிகைகளை தங்கமாக மாறும் விசித்திரம்! மர்ம குகையின் அதிர வைக்கும் உண்மைகள்

சேலம் மாவட்டத்தில் ஊரை விட்டு ஒதுங்கி இருக்கிறது அந்த ஒற்றை மலை. இந்த மலையில் ஒரு மர்ம குகை உள்ளது. அதற்குள் பீதியை கிளப்பும் பல மர்மங்கள் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ளது தங்காயூர் வேலம்மாள் வலசு என்ற பகுதி. இங்கிருந்து மேலும் 4 கி.மீ. சென்றால் சூரியமலை தென்படும். இந்த மலையில் இருக்கும் பாதாள குகை முன்பு 100 அடி தூரத்தில் கொங்கண சித்தரின் சிலை, விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகளை பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனிக்கிழமைகளில் பக்தர்கள் தவறாமல் வழிபட்டு வருகின்றனர். பாதாள குகைக்குள் விஷப்பூச்சிகள் அதிகம். அதனால் யாரும் நுழைய முடியாது. இந்த குகையில் கொங்கண சித்தர் என்ற முனிவர் வாழ்ந்ததாகவும், அவர் பல சித்து விளையாட்டுகளை செய்து வந்ததோடு, மருத்துவ மூலிகைகளை பயன்படுத்தி எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் வித்தையை கற்றவர் என்றும் கூறப்படுகிறது. குகைக்குள் உள்ள மைதானம், நாலுகால் மண்டபத்தில் தங்கப்புதையல் இருப்பதாகவும், இந்த புதையலை சித்தர் தான் இன்றைக்கும் பாதுகாத்து வருவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

சிலர், இன்னும் ஒருபடி மேலாக, தங்க ஊஞ்சலில் அமர்ந்தபடி இன்றும் சித்தர் ஓய்வெடுத்து வருகிறார் என்கின்றனர். குகைக்கு வெளியே மலைப்பாறையில் மேடை போல செதுக்கப்பட்டு மூலிகைகளை அரைப்பதற்கு உரல் போல ஒரு துளை உள்ளது. அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதற்கு ஏற்ப சிறிய மேடை போன்ற அமைப்பும் செதுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் கொங்கண சித்தர் அங்கு வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. மலை குடைந்து உருவாக்கப்பட்ட மர்மமான அந்த பாதாள குகையில் 2 அறைகள் உள்ளன. முதல் அறை சற்று பெரியதாக காணப்படுகிறது. 2வது அறை சிறியது. இந்த அறையில் தான், படுத்தபடி நுழையும் அளவுக்கு மிகச்சிறிய துவாரம் காணப்படுகிறது.

குகைக்குள் என்னதான் இருக்கிறது, பார்த்துவிடுவோமே என்ற அசட்டு தைரியத்தில் சில அசகாய சூரர்கள், முயற்சி செய்துள்ளனர். அவர்களால் அந்த துவாரத்தின் வழியே சிறிது தூரம் கூட செல்ல முடியவில்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டு, போன வேகத்திலேயே பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad