பற்றி எரியும் பாரிஸ்..! போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.

பாரிஸ் நகரில் பொலிஸாருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இந்நிலையில் பாரிஸ் புறநகர் பகுதிகளில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2ஆம் திகதி பாரிஸ் நகருக்கு அருகில் வைத்து இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கருப்பினத்தவரை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் 22 வயதான இளைஞர் எனவும், அந்த இளைஞரை அந்நாட்டு பொலிஸார் சித்திரவதை செய்துள்ள அதேவேளை, துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருக்கின்றது. ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டும், ஏனைய மூவர் மீது தாக்குதல் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞருக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் பாரிஸ் நகரின் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் தற்போது தீவிரமடைந்து வன்முறையாக மாற்றம் பெற்றுள்ளது.

இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வாகனங்கள் பல தீ வைக்கப்பட்டுள்ளதுடன், கட்டிடங்கள் மீது கல் வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.