இளம் பெண்பிள்ளைக்கு போதை மருந்தூட்டி ஏரியில் தூக்கியெறிந்த பெற்றோர்!

ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருப்பதாகக் சந்தேகித்த தம்பதியர், தமது பதின்ம வயதுப் பெண் பிள்ளைகளுக்கு போதை மருந்து ஊட்டி ஏரியில் தள்ளிய சம்பவம் லூதியானாவில் இடம்பெற்றுள்ளது. பதினைந்து வயதே நிரம்பிய இவ்விரு சகோதரிகளும் நேற்று முன்தினம் திங்களன்று இரவு தாமதமாக வீடு வந்து சேர்ந்தனர்.

ஏற்கனவே இவர்களது நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்த இவர்களது பெற்றோருக்கு இது மிகுந்த அதிர்ச்சியளிக்கவே, உணவில் போதை மருந்தைக் கலந்து உண்ணக் கொடுத்தனர். உணவு உண்ட சிறிது நேரத்தில் மயக்கமுற்ற தமது பிள்ளைகளைத் தூக்கிச் சென்ற பெற்றோர், அங்கிருந்த ஒரு ஏரியில் வீசிவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் காலை ஏரியில் இரண்டு இளம் சிறுமிகள் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற பொலிஸார், இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் ஜோதி என்ற சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர். உயிர் தப்பிய பெண்ணிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தன் பெற்றோரைச் சிக்கவைக்க விரும்பாத அவர், தான் ஒரு அனாதை என்றும், கோயில் வாசலில் பிச்சையெடுப்பதாகவும், ஒருவர் கொடுத்த உணவை உண்டதால் தனக்கு மயக்கம் ஏற்பட்டு ஏரியில் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தொடர்ச்சியான விசாரணைகளின் பின் நடந்த உண்மைகள் அனைத்தும் அம்பலமாகின. சிறுமியரின் பெற்றோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad