Trending News...

சாராஹாவின் விளைவுகள் பற்றி தெரியாமல் பயன்படுத்துபவர்களா? ஒருமுறை படிங்க...!!!

சாராஹா (#Sarahah)! இல்லாத ஒரு ஃபேஸ்புக் டைம்லைன் ஃபீட் காண்பித்துவிட முடியுமா? என்றால், அது அந்த ஆண்டவனாலும் முடியாது என்று கூறும் அளவிற்கு டாப் டிரென்ட்டிங்கில் சென்றுக் கொன்டிருக்கிறது சாராஹா.

சாராஹா என்றால் ஹானஸ்ட், அதாவது நேர்மை என்று பொருள். இதை முதன் முதலில் அலுவலகத்தில் நேரடியாக கருத்து கூற முடியாதவர்கள், அலுவலக பிரச்சனைகள் அல்லது அலுவல் ரீதியான பிரச்சனைகளை தங்கள் பாஸிடம் மறைமுகமாக கூற உருவாக்கப்பட்ட செயலி.

காலப்போக்கில் இது ஒருவரின் பர்சனல் டெவலப்மெண்ட் செயலியாக மாறியது. ஒருவரது நிறை, குறைகளை நேரடியாக கூற முடியவில்லை என்றால், இந்த சாராஹா மூலமாக கூறலாம். இதன் மூலம் ஒருவர் தன்னை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற கருவில் உருவான இந்த சாராஹா, இப்போது இந்தியாவில் அதிலும் முக்கியமாக பெண்களின் முகவரிகளில் வேறுவிதமாக செயற்பட்டு வருகிறது.
(post-ads)
சைஸ் என்ன? ஒரு சென்னை பெண்ணின் சாராஹா கணக்கில் ஒரு நபர், “நான் எப்போதுமே உனது அளவுகள் பற்றி அறிய மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இதை சற்று தீர்த்து வைக்க முடியுமா? (பொது அறிவுக்காக தான் கேட்கிறேன் :P) என நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்

தகுந்த பதிலடி! அதற்கு அந்த சென்னை பெண், “பாட்டா என்றால் 38, மெட்ரோ என்றால் 39, கேட்வாக் என்றால் 40, ஷூ அளவு 7” என, நிஜமாகவே “செருப்படி பதிவு தோழி” என்பது போல் தகுந்த பதில் அளித்துள்ளார் அவர். ஆனால், எல்லா பெண்களும் இப்படி நடந்துக் கொள்கிறார்களா? என்றால் இல்லை. சிலர் அதை ஒதுக்கி சென்று விடுகிறார்கள். சிலர் சாராஹாவையே டெலீட் செய்து விடுகிறார்கள். ஆனால், பலர் இது போன்ற பதிவுகளை பெருமையாக பகிர்ந்து வருகிறார்கள் என்பது தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

பெண்கள் கவனதிற்கு! நமது சமூகத்தில் சில நாய்கள் கூட்டம் எப்போதுமே, “எப்பாடா காரணம் கிடைக்கும், இவங்கள மட்டம் தட்டலாம்” என காத்திருக்கிறது. அந்த நாய்களுக்கு நீங்களே பிஸ்கட் போட்டு வரவழைத்துவிட வேண்டாம். “என்னுடன் எப்போது டேட்டிங் வருவாய்”, “நான் உன்னை காதலிக்கிறேன்…”,” உன்னை ஒருமுறை கிஸ் செய்ய வேண்டும்… ” என்பது போன்ற பல பதிவுகளை லவ் ஸ்மைலி, வெட்கப்படும் ஸ்மைலி போட்டு பெண்கள் பகிர்கிறார்கள். இது உங்கள் பாத்திரத்தை கெடுக்கும் என்பதை நீங்கள் மறந்துவிட்டது ஏன்?

உதாரணம்! மேலும், மேலும் தொடர்ந்து எனக்கு உங்களை பிடிக்கும், நான் ஒரு நாள் மட்டும் உங்களுடன் டேட் செய்ய வேண்டும் என ஒரு சாராஹா செய்தி வந்தால், அதை தவிர்த்து விடுங்கள். அல்லது உங்களுக்கான அவர் மீதான கோபத்தை கொட்டிவிடுங்கள். அதை விடுத்து அதை ஆமோதிப்பது போல அந்த பதிவுகளை நீங்களே ஷேர் செய்வது, “இந்த பொண்ணு இப்படி தான் போல…” என்ற பிம்பத்தை ஏற்படுத்திவிட கூடும்.

ஆண்கள் மட்டும் செய்யலாமா? உடனே! சிலர் “அப்போது ஆண்கள் மட்டும் இப்படிப்பட்ட சாராஹா செய்திகளை பகிரலாமா? என கேள்வி எழுப்பலாம். இங்கே ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் காணப்படுவதில்லை. ஏனெனில், ஒரு குடும்பத்தில், சமூகத்தில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கான மதிப்பு அதிகம். ஒரே தவறை ஆண், பெண் செய்தால், பெண்கள் அதிக தாக்கத்தை அடைவதன் காரணமும் அதுதான். ஒரு வெள்ளி மோதிரம் சாக்கடையில் விழுவதற்கும், வைர மோதிரம் சாக்கடையில் விழுவதற்கும் நம்மிடம் வெளிப்படும் உணர்வுகளில் வித்தியாசம் இருப்பது எப்படியோ, அப்படி தான் இதுவும். பெண்கள் மேன்மையானவர்கள் என்பதை பெண்களே அறியாதிருப்பது தான் சோகத்தின் உச்சம்.

ஆண்களின் கவனத்திற்கு! அப்பாடா சான்ஸ் கிடைத்தது என பெண்களுக்கு ஆபாச செய்திகள் அனுப்புவது, சைஸ் கேட்பது, டேட்டிங் கேட்பது எல்லாம் அவசியமா? உங்கள் வீட்டிலும், உறவிலும் ஒரு பெண் இதே சாராஹாவை பயன்படுத்தி வரலாம், அவரது சாராஹா இன்பாக்ஸ்-லும் இதே போன்ற செய்திகள் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம். சாராஹாவில் வருவதில் பெரும்பாலானை போலி தான். அதுக்கு ஏன் இவ்வளோ ஃபீலிங்….? என்றும் சிலர் கேட்கலாம். இது சாதாரண விஷயம் அல்ல. இது போன்ற சின்ன, சின்ன விஷயங்கள் தான் நமது பாத்திரம், குணாதிசயங்களில் வரும் நாட்களில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

ஒருவேளை… ஒருவேளை விளையாட்டாக நீங்கள் உங்களுக்கு தெரிந்த பெண்ணுக்கு ஆசை வார்த்தை அல்லது கேலியாகவோ, ஆபாசமாகவோ கருத்தை சாராஹாவின் மூலம் அனுப்புகிறீர்கள். அதை உங்கள் நண்பனிடம் காண்பித்து மகிழ்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த நண்பர் மூலமாகவோ, அல்லது அவர் வேறு நண்பனிடம் அதை பகிர்ந்து அவர் மூலமாகவோ அந்த பெண்ணை சென்றடைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அந்த பெண் உங்கள் மீது வைத்திருக்கும் மதிப்பு என்ன ஆகும்? அவர் மூலமாக மற்றவர் அறியவந்தால் உங்கள் வட்டத்தில் உங்கள் பெயர் சிறிதளவாவது கெட வாய்ப்புகள் உண்டு.

இதே வேலையா போச்சு! நாம் எந்த ஒரு கண்டுப்பிடிப்பையும் அதன் கருவை சார்ந்து பயன்படுத்துவது இல்லை. அதற்கான சமீபத்திய உதாரணம் சாராஹா. அந்த செயலியில் கூறப்பட்டுள்ளது போல கன்ஸ்ட்ரக்டிவ் கேள்விகள் நூற்றில் பத்து பேர் கூட கேட்பதில்லை. இதை தான் கடந்த ஒரு வாரமாக நாம் நமது ஃபேஸ்புக் வாலில் கண்டு வருகிறோம்.