ஓவியாவால் அடிவாங்கிய டிஆர்பி

நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்ட நாள் முதல் அந்த நிகழ்ச்சியை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் மேலும் ஒரு நடிகை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வரப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் ஜூலியானாவால் எகிறியது. ஆனால் அவரது செயல்பாடுகள், புறம் கூறுதல், பொய் பேசுதல் ஆகியவற்றைக் கண்ட மக்களுக்கு அவரை பிடிக்கவில்லை.இதைத் தொடர்ந்து மிகவும் நேர்மையாக, சிறு பிள்ளை போல் இருந்த ஓவியாவை அனைவருக்கும் பிடித்துவிட்டது. இதனால் தொடர்ந்து 4 அல்லது 5 முறை எவிக்ஷனுக்கு வந்தாலும் அவரை பொதுமக்கள் ஓட்டு போட்டு வெளியேற விடாமல் காத்தனர்.

இந்நிலையில் பொதுமக்கள் ஆதரவுடன் வலம் வந்த ஓவியாவுக்கு ஆரவுடனான காதல் பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டு அவராகவே வெளியேறிவிட்டார். அதுமுதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதனால் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் அடிவாங்கியது. ஏற்கனவே நடிகை பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். எனினும் டிஆர்பி ரேட் எதிர்பார்த்த அளவுக்கு கூடவில்லை. இதனால் மேலும் ஒருவரை வீட்டுக்குள் அனுப்பினால் கொஞ்சம் கலகலப்பாக இருக்கும் என்று கருதுகின்றனர்.தற்போது காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் புகழ் பிரியா பவானி ஷங்கர் அல்லது அட்டகத்தி, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்த நந்திதா ஆகியோரில் ஒருவரை உள்ளே அனுப்ப இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இருவரில் யார் என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.

எத்தனை நடிகைகளை அழைத்து வந்தாலும் நடிகை ஓவியா பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் சென்றால் மட்டுமே பார்ப்போம் என்று ரசிகர்கள் முடிவு கட்டி உள்ளனர். இதுதொடர்பாக டுவீட்டுகளும் கமல்ஹாசனின் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.