கொழும்பில் மனைவியை விற்பனை செய்த கணவன்!! இப்படி ஒரு துயரம்

மனைவியை விபச்சாரத்துக்காக விற்பனை செய்த கணவனை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனார். கணவனுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனார்.

மனைவியின் முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தவுள்ளனார்.

கொழும்பில் வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்ற கணவன் அங்கு பெண் ஒருவரிடம் தன்னை கையளித்ததாகவும் பின்னர் பல மைல்களுக்கு அப்பால் உள்ள பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள உள்ள ஆட்ம்பர வீடொன்றில் பணியாற்றியதாகவும் மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்

ஒரு மாதங்கள் அந்த வீட்டில் பணியாற்றியதாகவும் பின்னர் தமக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் பணியாற்ற வேண்டும் எனக் கூறி, வீட்டின் பெண் உரிமையாளர் அழைத்துச் சென்றதாகவும் தனது முறைப்பாட்டில் கூறிய மனைவி, சில நாட்களின் பின்னர்தான் தனக்கு விடயம் புரிந்ததாகவும் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

அங்கு வந்த இளைஞர்கள் சிலர் தன் மீது குற்றம் புரிய முற்பட்டபோது தான் அதற்கு உட்பட வில்லையென்றும் இதனால் விடுதி உரிமையாளரான குறித்த பெண் தன்னை தாக்கியதாகவும் முறைப்பாட்டில் கூறியுள்ளார். எதுவும் செய்ய முடியாத நிலையில் அங்கு வந்து சென்ற இளைஞர்களின் தேவைக்கு தான் உடன்பட்டதாகவும் பெருமளவு பணத்தை அந்த விடுதியின் பெண் உரிமையாளர் பெற்றுக் கொண்டதை தான் நேரில் கண்டதாகவும் மனைவி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவாறு அங்கு பணியாற்றிய ஒருவரின் உதவியுடன் தப்பிச் சென்று கணவனுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும் ஆனால் கணவன் தன்னை ஏசியதாகவும் மனைவி கவலையுடன் கூறினார். அதன் பின்னரே பொலிஸாரிடம் முறையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மனைவியின் முறைப்பாட்டின் அடிப்படையில் கணவனை கைது செய்த பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

(இந்த செய்தி ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவாக எழுதப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் உட்பட எவருடைய பெயர், ஊர் விபரங்கள் எதவும் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது)

உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.