அதிகளவில் வாசிக்கப்பட்ட பதிவுகள்.

இளமையுடன் நீண்ட ஆயுள் தரும் சோற்றுக் கற்றாளை ஜூஸ்! குடித்து பாருங்க.. அதியம் நடக்கும்

இளமையுடன் நீண்ட ஆயுள் தரும் சோற்றுக் கற்றாளை ஜூஸ் தயாரிக்கும் முறை.

தேவையான பொருட்கள்

சோற்றுக் கற்றாளை – 1
மோர் – சிறிதளவு
எலுமிச்சம்பழம் – 1
உப்பு – சிறிதளவு
செய்முறை

சோற்றுக் கற்றாளையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் சாற்றை எடுத்துச் சற்றே நீரில் அலசிப் பின் மோர் மற்றும் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து மிக்சியில் அடித்து, அடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்தால் சோற்றுக் கற்றாளை ஜூஸ் தயார்.

இதனை தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கூந்தல் நன்றாக வளரும்.

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது.

சோற்றுக் கற்றாளை புற்று நோயை தடுத்து நீண்ட ஆயுளை கொடுப்பதாக சமிபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

ஜூஸ் செய்ய நேரம் இல்லாதவர்கள் கற்றாளை ஜெல்லை சுத்தமான நீரில் 6 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடலில் சத்து கூடும், இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும் நீண்ட ஆயுளுடன்.