உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.

நீரோடையில் நீராடிய பெண்ணிடம் வித்தியாசமாக காதலை சொன்னவருக்கு நேர்ந்தது என்ன..?

நீரோடை ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் அருகில் சென்ற இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணின் ஆடைகளை கழைந்து இறுக அனைத்து அவரை அதிகமாக காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் தனக்கு நடந்த இச் சம்பவம் குறித்து பிபிலை பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இளைஞரை பிபிலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் பிபிலையைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் மஜிஸ்த்திரேட் நீதி மன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் 1500 ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அவ்வாறு தண்டப் பணம் செலுத்தாவிடின் ஒரு மாத கடூழிய சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் உத்தரிவிட்டுள்ளார்.

மேலும் குறித்த பெண்ணிற்கு நேர்ந்த துஷ்பிரயோகத்திற்கு 10000 ரூபா வந்திப் பணமும் செலுத்துமாறும் பிபிலை மஜிஸ்த்திரேட் நதீரா போகாஹாதெனிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.