தனக்கு கொரோனா வந்ததற்கு பார்ட்டி வைத்த யாழ்ப்பாண பொடியன்

கொரோனா தொற்றாளர் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய அதிர்ச்சி சம்பவம் நடந்தது.


யாழ் மாவட்டத்தின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவொன்றில் அண்மையில் நடந்த இந்த சம்பவம் பற்றி சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.


கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் நபர் ஒருவருக்கு பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


சம்பந்தப்பட்டவர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமென நம்பினார். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சோகத்தை தீர்க்க நண்பர்களுடன் மதுபான விருந்து நடத்தியுள்ளார். இதில் நெருங்கிய நண்பர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.


மதுபான விருந்து நடத்திய அன்று இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.


சம்பவம் பற்றி அறிந்த சுகாதார அதிகாரிகள், மறுநாள் காலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர்.
பிசிஆர் முடிவுகள் மற்றும் சிகிச்சை முடிந்த பின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.